×

இன்று பிளஸ் 2 தேர்வு: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இன்று பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் கற்ற பாடத்தை மனதில் நன்கு பதிய வைத்து தேர்வு எழுத வேண்டும். பிளஸ் 2 தேர்வானது உயர்கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கவனத்தில் கொண்டு தேர்வு எழுத வேண்டும். தமிழக அரசு தேர்வு முறையாக, பாதுகாப்பாக நடைபெற உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவ மாணவிகள் அனைவரும் நன்கு தேர்வு எழுதவும், அனைவரும் தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி: பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவச் செல்வங்கள் எந்த பதற்றமும், பரபரப்பும் இல்லாமல் கவனமாக படித்து 12ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அன்புணி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Tags : Chennai ,Thamaga ,president ,G.K. Vasan ,
× RELATED 4 நாட்களாக நடைபெற்று வந்த வேலூர்...