×

யாருடன் கூட்டணி? நாளை அறிவிக்கிறார் ராமதாஸ்?

பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்திய நிலையில் பிப்.28ம் தேதி முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அறிவிக்கவில்லை. இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் பாமக இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் தைலாபுரத்தில் நடைபெறுகிறது.

அதிமுக, பாஜவின் என்டிஏ கூட்டணியில் அன்புமணி இணைந்திருப்பதால் நாம் யாருடன் செல்வது என்று இக்கூட்டத்தில் ராமதாஸ் நிர்வாகிகளுடன் கருத்து கேட்க உள்ளார். இதற்காக நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த கூட்டம் முடிந்ததும் யாருடன் கூட்டணி என்று நாளையே ராமதாஸ் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Ramadoss ,PMK ,Vanniyar Sangam ,
× RELATED வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,929க்கு விற்பனை