×

காவிரி பாசன மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் 13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக காவிரி பாசன மாவட்டங்களில் 1300க்கும் கூடுதலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கடந்த நான்கு நாட்களாக எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்திற்காக செலுத்திய தொகையை திருப்பித் தர வேண்டும்; தங்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை பணியாளர்கள் கடந்த 25ம் தேதி முதல் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் தான் நெல் கொள்முதல் செய்யப்படாததற்கு காரணம். எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்து காவிரி பாசன மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Cauvery ,Anbumani ,Chennai ,PMK ,President ,
× RELATED நாங்க எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியுமா? பாஜவை மிரட்டும் கூட்டணி கட்சி