- சட்டமன்ற உறுப்பினர்
- OPS
- திமுக வாசமகம்
- உசிலம்பதி
- உசிலம்பட்டி
- மதுரை மாவட்டம்
- பர்வார்ட் பிளாக்
- நூக்கையதீவர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- விருதுநகர்
மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் பழம்பெருமைக்குரிய சட்டமன்ற தொகுதியாக உசிலம்பட்டி தொகுதி உள்ளது. பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் மூக்கையாத்தேவர் ஐந்து முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத் தொகுதியானது தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களின் எல்லைகள் கொண்டதாக பரந்து விரிந்திருக்கிறது. உசிலம்பட்டி நகராட்சி, எழுமலை பேரூராட்சி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியங்களை இணைத்து இத்தொகுதி இருக்கிறது.
எஸ்ஐஆர்க்கு பிறகு இத்தொகுதியில் 1,31,411 ஆண்கள், 1,32,724 பெண்கள், இதரர் 6 என மொத்தம் 2,64,141 வாக்காளர்கள் உள்ளனர். 50 சதவீதம் முக்குலத்தோர் மற்றும் பல்வேறு சமூகத்தினர் இங்கு இருக்கின்றனர். தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. தொகுதியில் பார்வர்டு பிளாக் கட்சியே அதிக முறை (8) வென்றிருக்கிறது. அதிமுக 3, திமுக 2, சுயேச்சை ஒருமுறை வென்ற நிலையில், அதிமுகவில் போட்டியிட்டு தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கும் ஐயப்பன் திமுகவிற்கு வந்துள்ளார். தற்போது இவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே உசிலம்பட்டி, சேடபட்டி ஒன்றியத்தலைமையை திமுக கைப்பற்றியது. இத்தொகுதியில் குறிப்பிட்ட வாக்கு வங்கி திமுகவிற்கு உள்ளது. இன்றைய அரசின் பலதரப்பட்ட திட்டங்களும் உசிலம்பட்டி தொகுதி மக்களிடம் திமுகவின் வலிமையை மேலும் மேம்படுத்தி இருக்கிறது. கடந்த முறை திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் போட்டியிட்ட நிலையில், தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளரான ஐயப்பன் திமுகவிற்கு வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. கடந்த முறை போட்டியிட்ட கமலின் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் சேர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுடன், சுயேச்சைகளும் களமிறங்கிய நிலையில், இம்முறை திமுக கூட்டணி இத்தொகுதியில் பிரதான வலிமை பெற்றிருக்கிறது. திமுக நிறுத்தும் வேட்பாளர் இம்முறை வெற்றியை, ‘அடிச்சுத் தூக்குவது’ உறுதியாகியுள்ளது. உசிலம்பட்டி தொகுதி முழுக்க எங்கு திரும்பினாலும் திமுக ஆதரவு குரல்களே ஓங்கி ஒலிக்கிறது.
