- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- Jawahirullah
- தாம்பரம்
- மனிதநேய மக்கள் கட்சி
- மாநில துணைப் பொதுச் செயலாளர்
- எம். யாகூப்.
- தமிழ்
- தமிழ்நாடு
தாம்பரம்: தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாநில துணை பொது செயலாளர் எம்.யாக்கூப் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா கூறுகையில், பாஜ தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்பாட்டை தான் தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு விரோதமான பாஜவின் பாசிச போக்கை நன்கு உணர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுத்துள்ளார், அதனை வரவேற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் டி.காமராஜ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.
