×

தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் திமுகவில் போட்டியிட விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுகவில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்க காலஅவகாசம் வரும் 6ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: நடைபெறவிருக்கும் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் கடந்த 20ம் தேதி முதல் வரும் 2ம் தேதி வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டும் என ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து திமுக தலைவர் பிறந்த நாளான இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் விண்ணப்பம் பெறப்படும். மேலும் திமுக தலைவர் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வேண்டுகோள் வைத்ததற்கிணங்க வரும் 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரையில் காலஅவகாசம் நீட்டிக்கப்படுகிறது. தமிழ்நாடு- புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதி ரூ.25,000, மகளிர்க்கும் மற்றும் தனித் தொகுதிக்கும் ரூ.15,000 விண்ணப்பபடிவம் தலைமைக் கழகத்தில் ரூ.1000 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Puducherry ,Duraimurugan ,Chennai ,Tamil Nadu and Puducherry State Legislature ,Secretary General ,Tamil Nadu-Puducherry State Legislative Council ,
× RELATED நாங்க எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியுமா? பாஜவை மிரட்டும் கூட்டணி கட்சி