×

ஜெப்ரீ எப்ஸ்டீனுடன் தொடர்பு முன்னாள் அதிபர் கிளிண்டனிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் விசாரணை

வாஷிங்டன்: சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த குற்றச்சாட்டில் அமெரிக்காவை சேர்ந்த ஜெப்ரீ எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெப்ரீ எப்ஸ்டீன் கடந்த 2019ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். எப்​ஸ்​டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரை​யாடல்​கள், புகைப்​படங்​கள், வீடியோக்​களை ஆவணப்​படுத்தி வைத்திருந்தார். எப்​ஸ்​டீன் கோப்​பு​களில் இடம்​பெற்​றுள்ள பிரபலங்​களின் சர்ச்​சைக்​குரிய புகைப்​படங்​கள், வீடியோக்​கள் வெளி​யாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்ஸ்டீனுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு தொடர்பு இருந்துள்ளது. இந்த வழக்கில் பில் கிளிண்டனிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஆளும் குடியரசு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அமெரிக்க நாடாளுமன்ற குழுவின் முன் ஆஜராகும் படி இருவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில், ஹிலாரி கிளிண்டன் நாடாளுமன்ற குழுவின் முன் ஆஜரானார். ஜெப்ரீ எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவரை சந்தித்தது எப்போது என்பது தனக்கு நினைவில் இல்லை என்று எம்பிக்கள் குழுவிடம் ஹிலாரி கூறியுள்ளார். விரைவில் பில் கிளிண்டனும் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு இல்லை. ஆனால், எப்ஸ்டீனுடன் மிகவும் நெருக்கமாக இருந்த கிஸலைன் மேக்ஸ்வெல் என்ற பெண்ணுடன் கிளிண்டன் விமானத்தில் பயணம் செய்துள்ளார். மேலும், கிளிண்டன் அதிபராக இருந்த போது எப்ஸ்டீன் வெள்ளை மாளிகை வந்தது பற்றி விசாரணை நடத்தப்படும்.

Tags : Former ,President ,Clinton ,US congressional committees ,Jeffrey Epstein ,Washington ,US ,Epstein ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் மன்னன் கொலை;...