×

ஆதரவு யாருக்கு? விக்கிரமராஜா பதில்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், குரும்பூரில் நடந்தது. சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பேரமைப்பின் கொடியேற்றி வைத்து பொதுக்குழுவை தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வியாபாரிகளை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு, 2 கட்டமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வியாபாரிகளுக்கு அதிகளவு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. சமாதான திட்டம் ஏற்படுத்தி இதனை கட்டுப்படுத்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும். வணிகர்களின் அடுத்த மாநில மாநாடு, திருவாரூரில் நடைபெறும். வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே எங்களது ஆதரவு இருக்கும். இதனை எங்களது ஆட்சி மன்ற குழு கூடி முடிவு செய்யும்’’ என்றார்

 

Tags : Wickramaraja ,Thoothukudi South District ,General ,Committee ,Tamil Nadu Federation of Traders' Associations ,Kurumpur ,Federation of Traders' Associations ,President ,Union ,
× RELATED 217 அரசுப் பள்ளிகளில் ரூ.296 கோடி மதிப்பு கட்டிடங்கள் திறப்பு