×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தாம்பரம் ஆர்டிஓ, தாசில்தாருக்கு அபராதம்

சென்னை, பிப்.27: நீ தாம்பரம் தாலுகா, கோவிலேஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தாம்பரம் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் தாம்பரம் தாசில்தாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன், அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலருக்கு எந்த வித தொடர்பும் இந்த வழக்கில் இல்லை என்றும் மற்ற அதிகாரிகளை பொருத்தவரை நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்றம் 12 வாரங்கள் அவகாசம் வழங்கிய நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடோ மறு ஆய்வு மனுவோ தாக்கல் செய்யப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை உதறி தள்ளமுடியாது. பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. தாம்பரம் தாலுகா வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் ஆகியோருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை 4 வாரங்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இதே போல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விருத்தாசலம் தாசில்தாருக்கும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Tambaram RTO ,Tahsildar ,Chennai ,High ,Court ,Kovilencheri ,Tambaram taluka ,Chennai Metropolitan Development Corporation ,
× RELATED 16 ஆண்டு கால இழுபறிக்கு பிறகு பரங்கிமலை...