திருவனந்தபுரம்: கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், மக்களின் உணர்வுகளை சிதைத்து, சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் உள்ளது. தணிக்கை சான்று வழிமுறைகளை சென்சார் போர்டு புறக்கணித்துள்ளதாகவும் கேரளா ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தணிக்கை வாரியம் மீண்டும் படத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். சட்டம்- ஒழுங்கு, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் வரம்புக்குள் வர முடியாது என கேரளா ஐகோர்ட் கூறியுள்ளது.
