சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே குறைந்து வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) மீண்டும் உயர்ந்தது. அதன்படி, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 14,930க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 14,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.295க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
