மும்பை : முன்னணி ஐ.டி. நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், டெக் மகிந்திரா நிறுவனங்களின் பங்குகள் 3 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. பார்த்தி ஏர்டெல் நிறுவன பங்கு விலை 3 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை சரிந்து 82510 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிவருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 220 புள்ளிகள் சரிந்து 25,490 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
