சென்னை: தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே ரயில் பயணிகளுக்கு இலவச பேருந்து சேவைக்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. ரயில் டிக்கெட் மற்றும் ரயில் பாஸ் வைத்திருக்கும் பயணிகள் பேருந்துகளில் கட்டணமின்றி செல்லலாம். காலை, மாலையில் நெரிசல்மிகு நேரத்தில் 7 நிமிட இடைவெளியில் மாநகர பேருந்துகள் 20 முறை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி, அண்ணா சாலை, தலைமைச் செயலகம் வழியாக பேருந்து இயக்கப்படுகிறது.
