×

மறைந்தார் மக்கள் தோழர் நல்லகண்ணு.. அவருக்கு வயது 101 : மக்கள் சேவைக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்!!

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் இரா.நல்லகண்ணு காலமானார்.அவருக்கு வயது 101.சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவுக்கு (101), கடந்த 1ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று 1.55 மணிக்கு அவர் உயிரிழந்தார். மறைந்த நல்லகண்ணுவிற்கு அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

*தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு பிறந்தவர் நல்லகண்ணு.
*விடுதலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்.
*மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.
*தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் போராட்டங்கள் மற்றும் சிறையில் கழித்தவர்.
*மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களின் விவரத்தை தொகுத்து நூலாக வெளியிட்டவர்.
*18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து ஏழை, தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர்.
*1992 முதல் 2005 வரை 13 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்தவர்.
*25 ஆண்டுகாலம் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றியவர்.
*தாமிரபரணியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை எதிர்த்து தனது 93வது வயதில் வழக்கு தொடுத்து அதற்கு எதிராக தடை பெற்றவர்.
*தனது 80வது பிறந்தநாளில் கட்சி வசூலித்து கொடுத்த ரூ.1 கோடியை அதே மேடையில் கட்சிக்கே திருப்பி கொடுத்தவர்.
*தகைசால் தமிழர் விருதுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சத்துடன் ரூ.5,000-ஐ சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பி கொடுத்தவர்.

Tags : Chennai ,Comrade ,Ra ,Communist Party of India ,Nallakanu ,Nalalkanu ,
× RELATED தேர்தலுக்காக இலவசங்களை அறிவிக்கத்...