×

திருச்சி, கோவை உள்ளிட்ட 11 விமான நிலையங்களை தனியாருக்கு விற்று ரூ.27,500 கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு!!

டெல்லி :பொதுத்துறை சொத்துகளை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டும் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 11 விமான நிலையங்களை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. என்.எம்.பி. எனப்படும் தேசிய நிதி திரட்டும் திட்டத்தை 2021ல் மத்திய அரசு துவக்கியது.இத்திட்டத்தின் நோக்கம், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அரசு சொத்துகளை விற்காமல் அவற்றின் மதிப்பை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதாகும்.இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சகம் ஒ.எம்.டி.ஏ. எனப்படும் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு ஒப்பந்த அடிப்படையில், 26 விமானங்களை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த 26 விமான நிலையங்கள் பல்வேறு கட்டங்களாக ஏலம் விடப்பட உள்ளன. முதற்கட்டமாக 11 விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்பட உள்ளன.தனியாருக்கு விற்பதற்காக திருச்சி, கோவை, வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர், கோழிக்கோடு, ராஞ்சி,ஜோத்பூர், கயா ஆகிய 11 விமான நிலையங்களை ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ளது. தனியாருக்கு 11 விமான நிலையங்களை கொடுப்பதன் மூலம் 5 ஆண்டுகளில் ரூ.27,500 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 14,950 கோடி ரூபாய் விமான நிலையங்களை ஓ.எம்.டி.ஏ, முறையில் குத்தகை விடுவதன் வாயிலாகவும், 12,550 கோடி ரூபாயை பங்கு விற்பனை வாயிலாகவும் திரட்டப்படவுள்ளது.

பொதுத்துறை சொத்துகளை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டும் திட்டத்தின் முதல் கட்டத்தில் ரூ.13,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2ம் கட்ட திட்டத்தில் தனியாருக்கு கொடுப்பதன் மூலம் நிதி திரட்டுவதற்கான இலக்கு இரு மடங்காக அதிகரித்துள்ளது. விமான நிலையங்கள் விற்கப்பட்டாலும் நில உரிமை அரசு வசமே இருக்கும் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும் மறுபுறம் தனியார்வசம் விமான நிலையங்கள் சென்றால் விமான நிலைய பயன்பாட்டு கட்டணம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : EU Government ,Trichy ,Goa ,DELHI ,N. M. B. ,
× RELATED தேர்தலுக்காக இலவசங்களை அறிவிக்கத்...