×

கலைத்துறை சாதனையாளர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை, பிப்.25: திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைபடைத்த கலைஞர்கள் கலை விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தின் கலைப் புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட கலைமன்றங்களின் வழியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதுவரை கலைவளர் மணி விருதும், 36 முதல் 50 வயதுவரை கலைச்சுடர் மணி விருதும், 51 முதல் 65 வயதுவரை கலை நன்மணி விருதும், 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலைமுது மணி விருதும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக்கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நுண்கலை மற்றும் நாட்டுப்புறக்கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுயவிவரக்குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச்சான்று, முகவரிச்சான்று (ஆதார்அட்டைநகல்) மற்றும் கலைஅனுபவச்சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் சின்ன காஞ்சிபுரத்தில் செயல்படும் காலை பண்பாட்டுத்துறை உதவிஇயக்குநர் அலுவலகத்துக்கு மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,Dharbagaraj ,Tiruvannamalai ,Tamil Nadu ,
× RELATED போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்து தகராறு...