- புதிய தமிழ்நாடு
- அஇஅதிமுக
- பி.ஜே.பி கூட்டணி
- பா.ம.க. அன்புமணி
- ஜி.கே.வாசன்
- தமகா
- ஜான் பாண்டியன்
- தாமாஎம்கே
- ஏசி
- சண்முகம்
- புதிய நீதிக் கட்சி
- தெலுங்கு தேசம்
அதிமுக – பாஜ கூட்டணியில் பாமக அன்புமணி அணி, ஜிகே.வாசனின் தமாகா, ஜான்பாண்டியனின் தமமுக, ஏசி சண்முகத்தின் புதிய நீதிகட்சி போன்றவை அந்த அணியில் இடத்தை உறுதி செய்து விட்டன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் தொடங்கி விட்டன. ேத.ஜ. கூட்டணியில் ஏற்கனவே புதிய தமிழகம் கட்சி இருந்தது. தற்போது ‘விரைவில் கூட்டணி குறித்து’ அறிவிப்பு வெளியிடப்படும் என கிருஷ்ணசாமி கூறி வருகிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும் என்பதை வைத்து தேர்தல் பணியாற்றி வருவதாகவும் கூறி வருகிறார்.
இதனால், தேஜ கூட்டணியில் இவரை கழற்றி விட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஜான்பாண்டியன், தேஜ கூட்டணியில் இருப்பதால் அவர் மூலமாக வரும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் ஓட்டு வங்கி போதும் என பாஜ நினைப்பதால் புதிய தமிழகம் வெளியேறட்டும் என்ற நிலையே உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறிய தவெகவும் புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடவில்லை. இதனால் புதிய தமிழகத்தின் தற்போதைய நிலை திரிசங்கு நிலையில் உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

