சேலம்: சேலம் சூரமங்கலத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி சுதா (33). இவர், தனது செல்போனில் சமூக வலைதளங்களை அதிகளவு பயன்படுத்தி வந்திருக்கிறார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் லோகநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஓராண்டுக்கு மேல் நீடித்த இந்த பழக்கம், அவர்களுக்கிடையே காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த கணவர் பாக்கியராஜ், தனது மனைவி சுதாவை கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி மதியம், வீட்டில் இருந்து சுதா வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. கணவர் உள்ளிட்ட உறவினர்கள், அவரை தேடியபோது, சுதா தனது இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்டா கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த சுதாவை தேடி வருகின்றனர்.
