திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் கடத்தப்பட்ட இரண்டு வயது குழந்தை 20 நிமிடங்களில் மீட்கப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் குளிர்பான கடை உரிமையாளர் கார்த்திக் முத்துவின் ஆண் குழந்தை கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது பைக்கில் வந்த தம்பதியால் கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பெற்றோரின் புகாரை அடுத்து தீவிர வாகனத் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது தம்பதி சிக்கினர்.
