சென்னை: 400 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத 4,332 கோயில்களில் திமுக ஆட்சியில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 5,000 கோயில்கள், கிராமங்களில் 5,000 கோயில்களுக்கு திருப்பணிகளுக்காக ரூ.212 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
