திருச்சி: திருச்சியில் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி மார்ச் 11ம் தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்று பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான இடத்தை தேர்வு செய்ய உள்ளோம்.
மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். எங்களால் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என நம்புகிறார்கள். நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஓ.பி.எஸ் மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை, அவர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
