தேனி, பிப். 19: தேனியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (20ம் தேதி) காலை 10 மணியளவில் நடக்க உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உடையவர்கள், 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு, இளநிலை பட்டப்படிப்புகள், நர்சிங் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கலுடன் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.
