நிலக்கோட்டை, பிப். 19: நிலக்கோட்டை அருகேயுள்ள சங்கராபுரத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (45). கூலித்தொழிலாளி. இவரது மாமா மகன் பிரவீன்குமார். இருவரும் சம்பவத்தன்று சிலுக்குவார்பட்டியில் உள்ள தனியார் மதுபான பாரில் மது அருந்தி விட்டு வெளியில் வந்தனர். அப்போது அங்கு வந்த சிலுக்குவார்பட்டியை சேர்ந்த கெவின், நிர்மல், ஜான், சிவா, நவீன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஜான் பீட்டரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதில் படுகாயமடைந்த ஜான்பீட்டரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா மற்றும் போலீசார் கெவின், நிர்மல், ஜான், சிவா, நவீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
