- ஆர்.வி. அரசு பள்ளி
- ஓசூர். ஓசூர்
- ஓசூர் அரசு ஆண்கள் பள்ளி
- ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- தமிழ்நாடு அரசு
- வளர்மதி…
ஓசூர், பிப்.14: ஓசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 330 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா ைசக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். இதில், பிரகாஷ் எம்எல்ஏ மற்றும் மேயர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டு 330 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 220 சைக்கிள்களும், மாணவிகளுக்கு 57 சைக்கிள்களும், உருது மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 60 சைக்கிள்களும் வழங்கினர். விழாவில் துணை மேயர் ஆனந்தய்யா, சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் தலைவர் எல்லோரா மணி, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், பகுதி செயலாளர் ராமு, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் அம்பேத்கர்ராஜ் நன்றி கூறினார்.
