×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,840க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,840 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.14,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்தது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில், தமிழ்நாட்டை பொறுத்தவரை தங்க விலை ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு மட்டுமல்லாமல், அட்சய திருதியை போன்ற நிகழ்வுகளுக்கும் தங்கம் பரவலாக வாங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்க விலை தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், விலை உயர்வு என்பது திருமண நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறி வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1920 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 2 வாரத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,440க்கும், பவுனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,15,520க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை குறைந்தது.

நேற்றைய தினம் தங்கம் விலை விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,320க்கும், பவுனுக்கு ரூ.960 குறைந்து ஒரு பவுன் ரூ.1,14,560க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,920 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும், பார் வெள்ளி ரூ.2,65,000க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,840 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.14,230க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.

Tags : Chennai ,
× RELATED பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு...