×

கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோபி, பிப். 18: கோபி அருகே உள்ள சிறுவலூர் பதிப்பாளையத்தில் வீடு தீப்பிடித்து எரிந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் சேதமாயின. சிறுவலூர் அருகே உள்ள பதிப்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (57). லாரி டிரைவர். ஈஸ்வரன் வழக்கம் போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றார்.அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு மாமியார் வீட்டிற்கு சென்றனர்.

இந்நிலையில் ஈஸ்வரன் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அருகில் இருந்தவர்கள் கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைப்பதற்குள் வீட்டில் இருந்த துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Gopi ,Siruvalur ,Easwaran ,
× RELATED கடலூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 2000 டன் நெல் மூட்டைகள்