×

வாங்க… வாங்க..! எங்க வீட்டு சுவத்துல எழுதிக்குங்க…!

தேர்தல் என்றாலே பிரசாரமும், விளம்பரமுமே கட்சியினரிடம் முதலிடம் பிடிக்கும். சுவர் விளம்பரங்கள் சரிந்திருந்தாலும், கட்சி பேனர்களை ஒட்டி வைக்க, கட்டி வைக்க கட்டிடச் சுவர்கள் முக்கியமாகிறது. இவ்வகையில் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியினர் ஓட்டு கேட்டு விளம்பரப்படுத்திட சுவர்களில் இடம்பிடிப்பதில் அதிகமதிகம் அக்கறை காட்டி வருகின்றனர்.

அந்தந்த பகுதியினர் தங்கள் பகுதியின் முக்கிய இடங்களைக் கண்டறிந்து இப்போதே அந்த இடத்தை ‘ரிசர்வ்’ செய்ய துவங்கி விட்டனர். 1959ம் ஆண்டின் தமிழ்நாடு திறந்தவெளி விளம்பரச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி, ஒரு தனிப்பட்ட நபருக்கு சொந்தமான இடம், கட்டிடம், சுற்றுச்சுவர் ஆகியவற்றில் அவரது அனுமதியில்லாமல் கொடி, பேனர் கட்டுதல், பேனர் வைத்தல், பிரசுரங்கள் ஒட்டுதல், வாசகங்கள் எழுதுவதற்கு தடை இருக்கிறது. எனவே, இதையெல்லாம் தெரிந்து கொண்ட கட்டிட உரிமையாளர்கள் தங்களைத் தேடி வரும் உள்ளூர் அரசியல்வாதிகளிடம், வெற்றிபெற்றால் தங்கள் பகுதிக்கு இதைச் செய்யணும், அதைச் செய்யணும் என்றொரு பொதுநலத்தில் கண்டிஷன் போடுவது அல்லது சுயநலமாக ஒரு தொகையை தந்தால் விளப்பரப்படுத்திக்கொள்ள அனுமதிப்பதாக டிமாண்ட் வைப்பது என களமிறங்கி விட்டனர்.

இதையும் மீறி பல்வேறு இடங்களிலும் ஆளுங்கட்சியின் திட்டங்கள் தரும் மகிழ்ச்சியில் குடும்பமே ஓட்டளிக்கும் வகையில் மாறிப்போன பலரும், ‘எங்க சுவத்துல வந்து எழுதிக்குங்க’ என மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளைத் தேடிப்போய் அனுமதிக்கடிதமே தந்து வருகின்றனர்.

Tags :
× RELATED விசிலை ஊதாமல் ரசிகர்களுக்கு சங்கு ஊதும் விஜய்: தமிமுன் அன்சாரி காட்டம்