×

உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கியதால் அப்பா, அண்ணன் என்று அழைத்து முதல்வரின் மீது மக்கள் பாசமழை; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மதுரை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரசுடன் கூட்டணி இறுதி செய்வது குறித்து தலைவர் முடிவெடுப்பார். கடந்தமுறை போல இந்த முறையும் 170 இடங்களில் திமுக போட்டியிடுவது குறித்தும் தலைவர் முடிவெடுப்பார். ஓட்டுப்போடுவது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். முதல்வர் வழங்கிய ரூ.5 ஆயிரம் நிதி தேர்தலுக்காக கொடுத்தது இல்லை. பாஜ மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரப்போகிறது. அது நிறைய பேருக்கு தெரியவில்லை.ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் ஒருமுறை இதேபோல நீதிமன்ற அனுமதி மூலம் திட்டத்தை நிறுத்தினார்கள். அதுபோல இங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை நிறுத்தவேண்டும் என பாஜ மற்றும் அதிமுகவினர் முயற்சி செய்தார்கள். அந்த மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமை இங்கு வரக்கூடாது என்பதற்காக தலைவர் முன்னேற்பாடாக மகளிருக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கிறார்.

இதற்காக, என்னிடம் ஏராளமான பெண்கள் முதல்வரிடம் நன்றி சொல்லுங்கள் என்றனர். அதுவும் முதல்வரை அப்பா என்றும் அண்ணன் என்றும் உறவாக குறிப்பிட்டு நன்றி சொல்லுங்கள் என்றனர். இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் கூட்டங்களில் உயிரிழப்பு நடப்பது குறித்து கேட்கிறீர்கள். இதை யாரிடம் கேட்கணும்? என்னிடமா கேட்கணும்? உண்மையா இதுக்கு யார் பொறுப்பேற்று, யார் பதில் சொல்லணும்? அறிஞர் அண்ணாவே இவரை (விஜய்) பார்த்து தான் திமுகவையே ஆரம்பித்தார் என்று கூட சொல்வார்.இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Tags : assistant secretary ,Stalin ,Madurai ,Deputy Chief Assistant Secretary ,Dimuka Youth District ,Municipal, State Organizers and Sub-Organizers ,Madura ,
× RELATED இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை...