×

சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை, சோழிங்கநல்லூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில்2.33 லட்சம் சதுர அடி பரப்பளவில் 84.42 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் பத்து தளங்களுடன், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தகவல் தொழில்நுட்ப கட்டடத்தின் மூலம் சுமார் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இப்புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடம், ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள், பசுமை மின் சக்தி பயன்பாடு, நீர் மேலாண்மை கடடமைப்பு என பல வசதிகளுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், நிர்வாக இயக்குநர் தீபனாவிஸ்வேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Choshinganallur Elkat Special Economic Zone ,Chief Mu. K. Stalin ,Chennai ,Elkat IT Building ,Choshinganallur Special Economic Zone ,
× RELATED இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை...