×

ராஜஸ்தான் அரண்மனையில் கோலாகல ஏற்பாடு; ரூ.60 கோடிக்கு திருமண வீடியோ விற்பனையா..? சர்ச்சைக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்களது திருமண வீடியோவை விற்க மறுத்துவிட்டனர். தெலுங்கு திரையுலகில் நீண்ட நாட்களாக காதலித்து வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு வரும் 26ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடக்கவுள்ளது.

இந்த திருமண நிகழ்விற்கு பிறகு ஐதராபாத்தில் திரையுலக நண்பர்களுக்காக பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர ஜோடியின் திருமணத்தை படம் பிடித்து ஒளிபரப்ப பிரபல ஓடிடி தளம் ஒன்று 60 கோடி ரூபாய் வழங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை நயன்தாரா உள்ளிட்ட சில பிரபலங்களின் திருமணங்கள் இதுபோன்று ஓடிடி தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், விஜய் தேவரகொண்டா இந்த பிரம்மாண்டமான தொகையை நிராகரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘திருமண நினைவுகள் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம் மற்றும் விலைமதிப்பற்றது’ எனத் தெரிவித்து ‘எனது திருமண நிகழ்வை வணிக ரீதியாக பயன்படுத்த விரும்பவில்லை’ என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை விட தங்களது தனிப்பட்ட மகிழ்ச்சிக்கே இந்த ஜோடி முன்னுரிமை அளித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Tags : Rajasthan Palace ,Vijay Devarakonda ,Hyderabad ,Rashmika Mandana ,
× RELATED பிரதமர் மோடி அமெரிக்காவுடன் போட்ட...