×

தேன்கனிக்கோட்டை அருகே பாலேஅக்கு கிராமத்திற்கு ரூ.97.61 லட்சத்தில் சாலை

தேன்கனிக்கோட்டை, பிப்.11: தேன்கனிக்கோட்டை அருகே காரண்டப்பள்ளி ஊராட்சி காந்திநகர் முதல் லம்பாடி மக்கள் வசித்து வரும் பாலேஅக்கு கிராமம் வரை சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே, சாலையை புதுப்பித்து தர வேண்டுமென அகோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிதிலமடைந்த சாலையை புதுப்பிக்க தமிழக அரசு ரூ.97.61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத்தொடர்ந்து நேற்று சாலை அமைக்கும் பணிக்கு நடைபெற்றது. தளி ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Paleakku village ,Thenkani Kottai ,Gandhinagar ,Karandapalli panchayat ,Paleakku ,Lambadi ,
× RELATED நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான...