வேளச்சேரி, பிப்.13: பெசன்ட் நகர், ஆல்காட் குப்பம், எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (34). இவர் கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து கடந்த 10ம் தேதி இரவு அந்தபெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு குடிபோதையில் வந்த பிரசாந்த் வீட்டுக்கு வெளியே நின்று, ஆபாச வார்த்தைகளால் பேசி, பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுவிட்டார். இது தொடர்பாக அந்த பெண் பெசன்ட் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் பிரசாந்தை கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், இவர் சாஸ்திரி நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, அடிதடி உட்பட சுமார் 9 குற்ற வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
