திருவொற்றியூர்: எர்ணாவூர் பகுதியில் காகங்கள் உயிரிழந்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் காகங்கள் திடீரென இறக்கின்றன. பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் செத்து மடிவதாக பொதுமக்கள் மத்தியில் பெரும் வீதி ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்த காகங்களை ஆழமான பள்ளம் தோண்டி புதைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில், சென்னை எர்ணாவூர் பகுதியில் நேற்று மாலை ஆங்காங்கே காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் பறவைகள் காய்ச்சல் பரவியுள்ளது என்று அச்சம் அடைந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இவர்கள் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். ‘’சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் இறந்த காகங்களை அப்புறப்படுத்தவேண்டும்’ என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
