×

டிசம்பர் 7ல் நடந்த சுகாதார ஆய்வாளர் எழுத்துத் தேர்வு முறைகேடு தொடர்பாக 6 பேர் மீது வழக்கு: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

 

மதுரை: டிசம்பர் 7ல் நடந்த சுகாதார ஆய்வாளர் எழுத்துத் தேர்வு முறைகேடு தொடர்பாக 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் பதில் அளித்துள்ளது. புதுக்கோட்டையில் ஒரு தேர்வு மையத்தில் செல்போன் கொண்டு சென்று முறைகேடு நடந்ததாக புகார் அளித்தனர். 4 தேர்வர்கள், 2 தேர்வு கண்காணிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த தேர்வுக் கூடத்திலும் முறைகேடு நடக்கவில்லை. சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப மறு தேர்வு நடத்தக்கோரிய மனு பிப்.24க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Medical Staff Selection Board ,Madurai ,Court ,Pudukkottai… ,
× RELATED தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...