×

எளிய வீட்டு மருத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்

நமது வீட்டு அடுக்களையில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில உணவு பொருட்களை வைத்து எளிய மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.

ஜாதிக்காய்: ஜாதிக்காய், கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, சித்திர மூலவேர் இவற்றை சம அளவில் எடுத்து பொடியாக்கி வைக்கவும். இந்த பொடியிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து வாயிலிட்டு நீர் அருந்தி வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கு, பக்கவாத நோய்கள், கபம் யாவும் விலகும்.

வெள்ளை பூண்டு: தினமும் பகல் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ள வயிற்று புண் ஆறும். இதய படபடப்பு நீங்கும். கொலஸ்டிராலை குறைக்க வல்லது.

ஜாதிபத்திரி: ஜாதிபத்திரி -30 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் தலா 10 கிராம் இவற்றை பொடியாக்கி வைத்துக் கொண்டு, இந்த தூளுடன் 2 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வர, அடிக்கடி வரும் வயிற்றுவலி, அஜீரணம், வயிற்று உப்புசம் நீங்கும்.

மாசிக்காய்: இரண்டு மாசிக்காய்களை தூளாக்கி 100 மிலி தண்ணீர் ஊற்றி காய்ச்சி ஆறியவுடன் வடிகட்டி தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிட்டால் தீராத வயிற்றுகடுப்பு நோயும் தீரும்.

கடுக்காய்: கிராம்பு 4-5, கடுக்காய் 6 இரண்டையும் தூளாக்கி நான்கு அவுன்ஸ் தண்ணீர்விட்டு 10 நிமிடம் வேக வைத்து வடிகட்டி ஆறியவுடன் ஒரே தடவை பருக வேண்டும். மலச்சிக்கல் நீங்கி நன்றாக பேதியாகும். உடல் லேசாகி, பல நோய்கள் தீரும்.

குங்குமப்பூ: குங்குமப்பூவுடன் பால் சேர்த்து சாப்பிட, கர்ப்பமான பெண்களுக்கு பிரசவகால தொல்லைகள் குறைந்து, குழந்தைக்கு நல்ல நிறம் உண்டாகும். குழந்தை பிறந்தவுடன் 5 கிராம் வீதம் 2 வேளை கொடுக்க பிரசவ கழிவுகள் உடனடியாக நீங்கும்.

மஞ்சள்: உடலில் வாயுவை வெளியேற்றி, வயிற்று புழு, பூச்சிகளை அழித்து, மூலநோயை கட்டுப்படுத்தும். பித்தத்தை நீக்கும்.

உளுந்து: உளுந்து பொடியுடன் தேன் கலந்து சாப்பிட, தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்து ஊற வைத்த நீரை எடுத்து மறுநாள் அருந்த சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

Tags : Dr. ,Kumkuma ,
× RELATED ஜிம்மில் உடற்பயிற்சி இளம் வயதில் ஹார்ட் அட்டாக் ஏன்?