- யூனியன் ரயில்
- அமைச்சர்
- அஸ்வினி வைஷ்ணவ் மும்பால்
- முதல் அமைச்சர்
- தில்லி
- அஸ்வினி வைஷ்ணவ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ரயில்வே அமைச்சர்
டெல்லி: முதலமைச்சர் கேள்விக்கு பதில் கூறாமல் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மழுப்பினார். ரயில்வே துறைக்காக தமிழ்நாடு கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தரப்படவில்லை என்பது முதலமைச்சரின் புகார் ஆகும். ரயில்வே அமைச்சரோ முதல்வர் கூறிய புகாரை மறந்துவிட்டு வேறு திட்டத்தை குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார். திட்ட அறிக்கையே தயாரிக்காத திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கவில்லை என கூறுகிறார்.
தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி தந்த 2500.61 ஹெக்டேர் நிலத்தில் 931.52 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தியதாக முதல்வர் அறிக்கை வெளியிட்டார். கையகப்படுத்தி வழங்கிய 931.52 ஹெக்டேர் நிலத்துக்கு இழப்பீட்டை ரயில்வே இதுவரை தரவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். முதலமைச்சர் சுட்டிக்காட்டியதற்கு மாறாக ரயில்வே கோரிய 4326 ஹெக்டேரில் 1052 ஹெக்டேரே மாநில அரசு வழங்கியுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
