×

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனுக்கள் வந்தன

 

அரியலூர், பிப். 10: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 372 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Tags : People's Grievance Day ,Ariyalur ,Ariyalur District Governor's Office ,District Collector Ratnasamy ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் மார்ச் 1ல்...