×

டி20 உலகக்கோப்பை 2026: இத்தாலியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி!

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் குரூப்-C லீக் ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் இத்தாலியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி கேப்டன் வேய்ன் மேட்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார், ஆனால் ஸ்காட்லாந்து பேட்டர்களின் அதிரடியால் அந்த முடிவு தோல்வியில் முடிந்தது.

ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜார்ஜ் முன்சே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு வெறும் 13.5 ஓவர்களில் 126 ரன்கள் குவித்து அதிரடி காட்டியது. இதில் அதிரடியாக விளையாடிய முன்சே 54 பந்துகளில் 84 ரன்களையும், மக்முல்லன் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ரன்களையும் குவிக்க, ஸ்காட்லாந்து 20 ஓவர் முடிவில் 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை இத்தாலிக்கு நிர்ணயித்தது.

209 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இத்தாலி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த நிலையில், ஹாரி மன்னென்டி (37) மற்றும் பென் மன்னென்டி (52) ஆகிய சகோதரர்கள் 4-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து ஓரளவு நம்பிக்கை அளித்தனர். இருப்பினும், ஸ்காட்லாந்து சுழற்பந்து வீச்சாளர் மைக்கேல் லீஸ்கின் சுழலில் சிக்கிய இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

லீஸ்க் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். முதல்முறையாக உலகக்கோப்பையில் களம் காணும் இத்தாலி அணிக்கு, தோல்வியுடன் சேர்த்து கேப்டன் வேய்ன் மேட்சனின் காயமும் பெரும் பின்னடைவாக அமைந்தது. பங்களாதேஷ் அணிக்கு பதிலாக இந்தத் தொடரில் வாய்ப்பு பெற்ற ஸ்காட்லாந்து அணி, தனது முதல் போட்டியிலேயே வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

Tags : T20 World Cup 2026 ,Scotland ,Italy ,KOLKATA ,ICC ,T20 WORLD CUP ,EDEN ,Wayne Matson ,
× RELATED விராட் கோலி, ரோஹித் சர்மா தரமிறக்கம்: பிசிசிஐ அறிவிப்பு