×

கத்தார் ஓபன் டென்னிஸ் நம்பர்-1 வீராங்கனை சபலென்கா விலகல்

தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நம்பர்-1 வீராங்கனை அரினா சபலென்கா விலகியுள்ளார். கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோஹாவில் நேற்று தொடங்கியது. இதில், உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர்-1 வீராங்கனையாக இருக்கும் பெலாரசின் அரினா சபலென்கா, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அரினா சபலென்கா, கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபைகினாவிடம் தோல்வியடைந்து, சாம்பியன் கோப்பையை தவறவிட்டார். இருப்பினும் தரவரிசை பட்டியலில் தற்போதும் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளார். அவர் கத்தார் ஓபனில் இருந்து விலகி இருப்பது டென்னிஸ் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Qatar Open ,Sabalenka ,Doha ,Aryna Sabalenka ,
× RELATED U19 உலகக் கோப்பை; 100 ரன்கள்...