தற்சமயம் நகர்ப்புற மளிகைக் கடைகள், கிராமப்புறச் சந்தைகள் இரண்டிலுமே – பெரும்பாலான நுகர்வோர்கள் தங்கள் ஒட்டுமொத்த மாதாந்திர வீட்டுச் செலவுகளைக் கணக்கிடும் வரை அவர்களால் அறிந்து கொள்ளமுடியாத வகையிலான – ஒரு அமைதியான, ஆனால் மிக முக்கியமான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் சந்தைகள் அத்துடன் சேர்ந்து, தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் எங்கள் வெளியீட்டாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வு, பொருட்களின் சிறிய பேக்கிங் விலை ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
வழக்கமாக ₹5 மற்றும் ₹10 விலையில் வாங்கப்படும் பிஸ்கட் போன்ற பொருட்களின் பாக்கெட்டுக்களின் அசல் பேக்கிங் சில்லறை விலை குறைவாக ₹4.5 மற்றும் ₹9 ஆக குறிப்பிடப்பட்ட மாற்று பேக்கிங்குடன் அதிகளவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இந்த பேக்குகள் நுகர்வோருக்கு ₹5 மற்றும் ₹10 என முழுமையாக்கப்பட்ட விலைகளில் விற்கப்படுகின்றன. பிஸ்கட் பாக்கெட்டுக்கள் போன்ற பெரும்பாலான சிறு மதிப்புடைய பொருட்களுக்கான பரிவர்த்தனைகளில், நுகர்வோர் “ஐந்து ரூபாய்” அல்லது “பத்து ரூபாய்” பேக்குகள் என்று குறிப்பிட்டுக் கேட்கிறார்கள், அதில் அச்சிடப்பட்டிருக்கும் MRP-விலையை அரிதாகவே சரிபார்க்கிறார்கள்.
இந்த நுட்பமான ஆனால் பிரவலாக மேற்கொள்ளப்படும் இந்த விலை முழுமைப்படுத்தப்படும் நடைமுறை விற்பனை விநியோகச் சங்கிலிக்கு (இதில் மளிகைக் கடை கிரானா உரிமையாளர் பயன்பெறுவார்) பயனளிக்குமே தவிர நுகர்வோர் பயனடையமாட்டார் ஒவ்வொரு பேக்கிங்கிலுமுள்ள இந்த வித்தியாசம் மிகக் குறைவாக இருப்பதாக தோற்றமளித்தாலும், அது காலப்போக்கில் ஒன்று சேர்ந்து பெரும் மதிப்புள்ளதாக மாறுகிறது. குறிப்பாக, தங்களது அன்றாட நுகர்வுப் பொருட்களுக்கு சிறிய போட்டலங்களை விரும்பி நாடும் குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பை விளைவிக்கும்.
நுகர்வோர்களுக்கு பொருட்களை மலிவு விலையில் வழங்கவும் மற்றும் அவர்களுக்கு நேரடி நன்மைகளை வழங்கும் பொருட்டும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருள் மீதான GST வரி சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட சூழமை கருத்தில் கொள்ளும் போது, இத்தகைய நிலைமை ஆழ்ந்த கவலையளிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், சந்தை செயல்பாடுகளை கணித்து சீர்தூக்கிப் பார்க்கையில், வழங்கப்பட்ட வரிச் சலுகை சில்லறை விற்பனை நிலைய மட்டத்தில் விற்பனையாளர்களால் பகுதியளவில் சரி செய்து கொள்ளப்பட்டு – மறைமுகப் பணவீக்கத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழும் வகையில் – நுகர்வோர் முன்பை விட குறைந்த அளவு பொருளுக்கு அதே விலையை செலுத்தும் நிலையை உருவாக்குகிறது.
இது. இந்தப் பிரச்சினை குறிப்பாக MRP விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ள பகுதிகளான நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில், வெளிப்படையாகத் தெரிகிறது, மற்றும் அதை கட்டுப்படுத்துவதற்கான அமலாக்க நடைமுறைகள் அவ்வப்போது மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அச்சிடப்பட்ட MRP- விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்வது ஒரு சட்ட மீறல் நடவடிக்கையாகும். இருப்பினும் இந்த செயல்பாடுகள் பல இடங்களில் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
காலப்போக்கில், இது நுகர்வோர் நம்பிக்கையை மட்டுமல்ல, வீட்டுச் செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட வரி சீர்திருத்த நடவடிக்கைகளின் மீதான நம்பகத்தன்மையையும் குறைக்கும் அபாயம் உள்ளது. கொள்கை வகுப்பாளர்கள் நுகர்வோர்களின் அன்றாட செலவுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான விலை நிர்ணயம் போன்றவற்றை முன்னிறுத்தி வலியுறுத்திவரும் நிலையில் இத்தகைய சந்தை குளறுபடிகள் ஒரு சவாலாக அமைகின்றன. வலுவான அமலாக்க நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு மூலம் இதற்கான தீர்வு காணப்படாவிட்டால், MRP மீறல்கள் மற்றும் மறைமுக பணவீக்கம் ஆகியவை GST சீர்திருத்தங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் நன்மைகளை தொடர்ந்து நீர்த்துப்போகச் செய்யும் – அதை உணராமல் நுகர்வோர் குறைந்த பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
