- தேவிகா
- பி.வி. சிந்து
- புது தில்லி
- தேவிகா சிஹாக்
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் சூப்பர்
- ஒலிம்பிக்
- ஐர்வாந்ஷ்ய ஆதி பிரதம்
புதுடெல்லி: தாய்லாந்து மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக், தனது வெற்றிக்கு, ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் பயிற்சியாளர் அய்ர்வன்ஷ்யா அதி பிராத்மா காரணம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிந்துவுடன் சேர்ந்து பல மாதங்கள் பயிற்சிகளில் ஈடுபட்டேன். ஒழுக்கத்துடன், கடினமாக உழைக்கும் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்தது எனக்கு சிறந்த பயனை அளித்தது. தவிர பயிற்சியாளர் அய்ர்வன்ஷ்யா எனக்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளித்தார்’ என்றார்.
