- கோயம்புத்தூர்
- வேக சறுக்கு
- தமிழ்நாடு வேக சறுக்கு சங்கம்
- இந்திய வேக சறுக்கு கூட்டமைப்பு
- 25வது தேசிய வேக சறுக்கு சாம்பியன்ஷிப்
- ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்
- சென்னை
கோவை, பிப். 4: சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில், இந்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் சம்மேளனம் சார்பில், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் 25-வது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. இப்போட்டி, கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சார்பில் பங்கேற்ற, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.காம் கணக்கியல் மற்றும் நிதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவி ஜோஷினி, ஆயிரம் மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
மேலும், 400 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் பாய்ண்ட் டூ பாய்ண்ட் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவி ஜோஷினியை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.
