கருர், பிப். 4: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். குறைந்தபட்ச ஒய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும், மற்ற பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் (தமிழ்ச்செல்வி குரூப்) மாவட்ட செயலாளர் பத்மாவதி தலைமை வகித்தார். கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
