×

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர், ஜன. 30: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்எஸ்டிஏ இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடைபெற்று வரும் இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சங்கரேஸ்வரி தலைமை வகித்தார். வட்ட செயலாளர்கள் சுரேஷ், செல்வராஜ், சாலினி உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் ஊதியக்குழுவில் 36 மற்ற பிரிவினருக்கும் மூன்று நபர்கள் அடங்கிய ஊதிய குழுவில் 24 பிரிவினருக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது. பல நுற்றுக்கணக்கான பிரிவினருக்கும் ஊதிய முரண்பாடுகள் சரி செய்யப்பட்டது. எனவே, 2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

 

Tags : Karur Regional Transport Office ,Karur ,SSDA Secondary School ,Registered Senior Teachers' ,Movement ,District Vice President ,Sankareshwari.… ,
× RELATED காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய் அலுவலர்கள் கலெக்டரிடம் மனு