×

பிரபல நகை கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை

சிதம்பரம், பிப். 4: கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழவீதி மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நகை கடை, உரிமையாளின் வீடு மற்றும் கீழ வீதியில் உள்ள நகை கடையில் சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழுவினர், நேற்று மதியம் அதிரடியாக நுழைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், நகை கடையில் உள்ள நகைகள், லேப்டாப், கம்ப்யூட்டர், நகை இறக்குமதி செய்யப்பட்ட ஆவணங்கள், 916 ஹால் மார்க் சீல்கள் என பல்வேறு வகையில் சோதனை நடத்தினர். உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் சரியான முறையில் உள்ளனவா, ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் போடப்பட்ட போலி நகை பில்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆய்வின் காரணமாக நகை கடையில் வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கடையின் ஊழியர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை சிதம்பரம் நகைக்கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chidambaram ,Directorate of Goods and Services Tax Investigation ,Keezhavithi ,Kattumannarkovil ,Cuddalore district ,
× RELATED ராஜபாளையத்தில் நாளை மின்தடை