×

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசால் ஏதாவது ஒரு நன்மை: அமைச்சர் முத்துசாமி பேட்டி

 

ஈரோடு: ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா அவர்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய மாற்றத்திற்கும், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு பெரிய அளவில் வருவதற்கு அடித்தளமிட்டு சென்றார். அதற்கு பின்னால் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டை வளர்த்தார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கொள்கைகளை கடைப்பிடித்து இன்றைக்கு இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில், தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் மட்டும் அல்ல, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏதாவது ஒரு நன்மை இந்த அரசால் சென்று சேர வேண்டும் என்பதை திட்டமாக வைத்து முதல்வர் நிறைவேற்றி உள்ளார். அதற்கு துணையாக துணை முதல்வர் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். தவெக தலைவர் விஜய், ‘‘திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு ‘‘திமுகவின் உயரம் என்ன?, தவெக தலைவரின் அனுபவம் என்ன?, அவர் இப்படி பேசலாமா? என பொதுமக்கள் பேசுவார்கள்’’ என்றார்.

Tags : DMK government ,Tamil Nadu ,Minister ,Muthusamy ,Erode ,Su. Muthusamy ,Anna ,Kalaignar Karunanidhi ,Tamil Nadu.… ,
× RELATED சாமானிய மக்களின் கைகளில் அரசியல்...