சென்னை: விவசாயிகள் வங்கி கணக்கில் பிப்.15 முதல் காப்பீட்டு தொகையை வரவு வைக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ‘2025 குறுவை பருவத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் பிப்.14க்குள் ஒப்புதல் தந்து, பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும். சம்பா நெல் பயிர் அறுவடை பரிசோதனை விவரம் 34 மாவட்டங்களில் 39,428 எண்கள் நடத்தப்பட வேண்டும். தற்போது 25% முடிவுற்ற நிலையில் மீதமுள்ள 75% முடிவுற்றவுடன் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படும். வெள்ள பாதிப்புக்கு உள்ளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒரு வாரத்தில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
