சென்னை: வேற்று மொழியை திணித்தால் என்றுமே ஏற்கமாட்டேன் என நிகழ்ச்சி ஒன்றில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார். கீழடி அகழாய்வில் 3500 ஆண்டுகளை தாண்டி நிற்கின்ற ஒரே மொழி தமிழ்தான் என நிரூபணமாகியுள்ளது. பராசக்தி படம் பார்த்ததும் மொழிப் போராட்டம் குறித்து மகனிடம் கேட்டபோது அவருக்கு தெரியவில்லை. மொழிப் போராட்டத்தை சொல்லிக்கொடுக்காமல் கடமையிலிருந்து தவறிவிட்டதாக கருதினேன். மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி நிறைவு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி உரையாற்றினார்.
