தேவையானவை
சீரகச் சம்பா அரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 2 ஸ்பூன்
நெய் – 5 ஸ்பூன்
பொடித்த வெல்லம் – 1½ கப்
பால் – ¼ கப்
ஏலப்பொடி – ½ டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
செய்முறை
முதலில் வெறும் கடாயில் பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் அரிசி, பருப்பை கழுவி பாலும், தண்ணீரும் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு 1 நிமிடம் ஸிம்மில் வைத்து வேகவிடவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைத்து, சூடாக்கி வடிகட்டவும். குக்கரை திறந்து சாதத்தை கரண்டியால் நன்கு மசித்து கரைத்த வெல்லம் ஊற்றி, ஏலப்பொடி சேர்த்து சிறிது நெய் ஊற்றி கிளறவும். சேர்ந்து வந்ததும் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து பொங்கலில் போட்டுக் கிளறவும். இதுவே சீரகச் சம்பா சர்க்கரை பொங்கலாகும்.
