×

விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு மக்கள் பீதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இரவு 9.08 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகளில் சிறிய பொருட்கள் குலுங்கின. ஒரு சில நொடிகள் நீடித்த நில அதிர்வால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணன்கோவில், ரைட்டன்பட்டி தெரு, குன்னூர், குப்பணாபுரம், வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர். இதேபோல் சிவகாசி, திருத்தங்கல், சாத்தையாபுரம், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. ராஜபாளையத்தின் கிழக்கு பகுதிகளில் அதிகளவில் நில அதிர்வு உணரப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டது இதுவே முதல் முறை.

Tags : Virudhunagar district ,Srivilliputhur ,Sivakasi ,Vathirairipu ,
× RELATED ரூ.915 கோடியில் 55 புரிந்துணர்வு...